மகாராஷ்டித்தில் ஒரேநாளில் 63,282 பேருக்கு கரோனா; 802 பேர் பலி
மகாராஷ்டித்தில் ஒரேநாளில் 63,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டித்தில் ஒரேநாளில் 63,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 63,282 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 6,63,758 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 802 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 61,326 பேர் குணமடைந்தனர். இதுவரை 39,30,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40,43,899 பேர் வீட்டிலும், 26,420 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய பத்து மாநிலங்களில் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...