தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கரோனா நிவாரணப் பணிகளில் 42 விமானப் படை விமானங்கள்

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா நிவாரணப் பணிகளில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 42 விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

News image

கரோனா நிவாரணப் பணிகளில் 42 விமானப் படை விமானங்கள்

Updated On :8 மே 2021, 10:40 am


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா நிவாரணப் பணிகளில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 42 விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

மருத்துவ மற்றும் நிவாரணப் பொருள்களைக் கொண்டுச் செல்லும் பணியில் இந்த விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என்றும், வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு வரும் பணியிலும் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 75 ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்திய விமானப் படையின் வைஸ் மார்ஷல் எம். ராணாடே தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் உள்நாட்டுக்குள் மருத்துவப் பொருள்கள் மற்றும் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.