புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி

நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 மே 2021, 10:23 am

DIN

நாட்டில் இதுவரை 16.73 கோடிக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்பட்டு, விநியோகிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

இதுவரை 2933 பிராணவாயு செறிவூட்டிகள், 2429 பிராணவாயு சிலிண்டர்கள், 13 பிராணவாயு உற்பத்தி கருவிகள், 2951 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 16.73 கோடியை இன்று கடந்துள்ளது.

தமிழகம் (10,703) உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதில் 14,88,528 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 24,37,299 முகாம்களில் 16,73,46,544 தடுப்பூசிகள் நாடுமுழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 23 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசித் திட்டத்தின் 112-வது நாளன்று (மே 7, 2021) 22,97,257 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 18,692 முகாம்களில் 9,87,909 பயனாளிகளுக்கு முதல் டோஸும், 13,09,348 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.