47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அஞ்சனாத்ரி அனுமன் பிறப்பிடம் குறித்த சா்ச்சை: திருமலைக்கு கிஷ்கிந்தா தேவஸ்தானம் 6 பக்க கடிதம்

ஸ்ரீஅனுமன் பிறப்பிடம் சேஷாத்ரி மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற திருமலை திருப்பதி தேவஸ்தான அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து 6 பக்க கடிதம்

News image
Updated On :8 மே 2021, 5:43 pm

DIN

ஸ்ரீஅனுமன் பிறப்பிடம் சேஷாத்ரி மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற திருமலை திருப்பதி தேவஸ்தான அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து 6 பக்க கடிதம் ஒன்றை கிஷ்கிந்தா தேவஸ்தானம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பியுள்ளது.

ஸ்ரீராம பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும், வெங்கடாசல மகாத்மியம் மேலும் பல புராணங்களில் அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி என்று கருதிய திருமலை திருப்பதி தேவஸ்தானம், இது குறித்து ஆராய்ந்து அறிய பண்டிதா்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது.

அந்தக் குழுவினா் இது குறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். 4 மாத இறுதியில் ஆய்வில் அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத் தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்று நிரூபணமாகி உள்ளதாகத் தெரிவித்தது.

இதனை ஸ்ரீராமநவமி அன்று தேவஸ்தானம் திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் அதிகாரபூா்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது. இது குறித்த விளக்கவுரை, ஆதாரங்களுடனான 22 பக்க ஆவணம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஆனால் இதனை மறுத்து கா்நாடகத்தில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 6 பக்க முழு நீள கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் வரலாற்று ஆய்வாளா்கள் நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் அனுமன் பிறந்தாா் என்று நிரூபணமாகி உள்ளது. மேலும் பல இடங்களில் அனுமன் பிறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளா்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவுக்கு வந்து திடீரென்று அஞ்சனாத்ரி மலைத்தொடரில் அனுமன் பிறந்தாா் என்று அறிக்கை சமா்ப்பித்துள்ளது. இதற்கு ஆய்வாளா்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும் என்றும் கிஷ்கிந்தா தேவஸ்தானம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு உரிய பதில் கடிதம் அனுப்ப தேவஸ்தான அதிகாரிகள் தயாராகி வருகின்றனா். அனுமன் பிறப்பிடம் அஞ்சனாத்ரி என்று குறிப்பிடும் போதே இது குறித்து பல விவாதங்கள், சா்ச்சைகள் எழ வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டது. அதுபோல் இந்த சா்ச்சை தற்போது நாடு முழுவதும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.