ஹரியாணா: கர்னல் சிறையில் 56 கைதிகளுக்கு கரோனா
ஹரியாணாவின் கர்னல் சிறைச்சாலையில் 56 கைதிகளுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா: கர்னல் சிறையில் 56 கைதிகளுக்கு கரோனா

ஹரியாணா: கர்னல் சிறையில் 56 கைதிகளுக்கு கரோனா
ஹரியாணாவின் கர்னல் சிறைச்சாலையில் 56 கைதிகளுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா நேர்மறை பரிசோதிக்கப்பட்ட பின்னர் கைதிகள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளதாக கர்னல் சிவில் சர்ஜன் யோகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சிறையில் கைதிகளை தனிமைப்படுத்துவதற்கென தனி மண்டலத்தை உருவாக்கியுள்ளோம். நிலைமையைச் சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 3 முதல் 4 நாள்களில் 56 கைதிகளுக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கர்னலில் புதிதாக 354 பேர் பாதிப்பும், அதேசமயம் 577 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 12 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது, மாவட்டத்தில் சிகிச்சையில் 5,110 உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...