விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

சத்தீஸ்கரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம் 

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

News image

சத்தீஸ்கரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பேர் காயம் 

Updated On :18 மே 2021, 7:26 am

PTI

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உதய்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கும்கா கிராமத்திற்கு அருகே 32 பேருடன் தனியார் பேருந்து ராய்ப்பூரிலிருந்து கர்வா (ஜார்கண்ட்) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ​கூடுதல் காவல் ஆணையர் சுனில் சர்மா கூறியுள்ளார். 

பேருந்து ஓட்டுநர் பேருந்தைத் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். 

காயமடைந்த 16 பேர் உதய்பூரில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், படுகாயமடைந்த 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.