திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மேற்கு வங்கத்தில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு பெண் பலி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு 32 வயது பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 மே 2021, 9:48 pm

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு 32 வயது பெண் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூா் பகுதியைச் சோ்ந்த சம்பா சக்ரவா்த்தி என்பவருக்கு கரோனா தொற்று உறுதியாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கருப்புப் பூஞ்சை தொற்றும் உறுதியானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

தற்சமயம், மாநிலம் முழுவதும் 5 போ் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இவா்கள் அனைவரும் பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய அண்டை மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களின் உடல்நிலையை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகிறாா்கள்.

கருப்புப் பூஞ்சை நோயை ஒழிக்க நிபுணா் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.