ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,108 பேருக்குத் தொற்று
ஒடிசாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 11,108 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,1085 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் அதிகரிக்கும் தினசரி கரோனா: புதிதாக 11,1085 பேருக்குத் தொற்று
ஒடிசாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 11,108 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை 60,759 மாதிரிகள் பரிசோதித்த பின்னர் புதிய கரோனா வழக்குகள் கண்டறியப்பட்டன, இதுவரை, மாநிலத்தில் 6,79,530 பேர் தொற்றுக்குப் பாதித்துள்ளனர். மேலும், 2,456 இறப்புகளும் பதிவாகியுள்ளது.
புதிய தொற்றுநோய்களில், 6,219 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்டறியப்பட்டன, மீதமுள்ள 4,889 பேர் உள்ளூரில் பதிவானது.
தற்போது மாநிலத்தில் 1,09,639 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 10,881 பேர் குணமடைந்தனர், இதையடுத்த மொத்த மீட்பு எண்ணிக்கை 5,67,382 ஆக உள்ளது.
கரோனா மருத்துவமனையின் முழு செலவினங்களையும் முதலமைச்சரின் நிவாரண நிதியம் (சி.எம்.ஆர்.எஃப்) ஏற்கும் என்று பட்நாயக் அறிவித்தார். அனைத்து படுக்கைகளும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன, தேவைப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...