விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 400 மருத்துவர்கள் பலி

கரோனா இரண்டாவது அலையில் இதுவரை சுமார் 400 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

News image

இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 400 மருத்துவர்கள் பலி

Updated On :22 மே 2021, 8:25 am

PTI

கரோனா இரண்டாவது அலையில் நாட்டில் இதுவரை சுமார் 400 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட செய்தியில்,

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது. இதுவரை தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 420-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அதில் அதிகபட்சமாகத் தில்லியில் 100 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர். 

பிகாரில் குறைந்தது 96 மருத்துவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31, தெலங்கானாவில் 20, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் 16 மருத்துவர்கள் பலியானதாகவும், கரோனா 2-ம் அலையில் மகாராஷ்டிரத்தில் 15 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்று ஐ.எம்.ஏ-வின் மாநில வாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.