விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மும்பை: முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.55 கோடி வசூல்

மும்பையில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
மும்பை: முகக்கவசம் அணியாதோரிடம் ரூ.55 கோடி வசூல்
Updated On :24 மே 2021, 7:30 am

DIN

மும்பையில் 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அம்மாநில அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியாவிடில் ரூ. 200 முதல் ரூ.500 வரை அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாததால், பொதுமக்களிடமிருந்து இதுவரை ரூ.55 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.