தில்லிக்கு நேரடியாக தடுப்பூசி தர பைசர், மாடர்னா மறுப்பு
அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளை நேரடியாக தில்லிக்கு விநியோகிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளை நேரடியாக தில்லிக்கு விநியோகிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு நிறுவனங்களும் தடுப்பூசியை நேரடியாக விநியோகிக்க மறுப்பு தெரிவித்து, மத்திய அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வதாகக் கூறின.
இந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசிகளை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்குமாறு மத்திய அரசை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்."
முன்னதாக, மாடர்னா நிறுவனம் பஞ்சாப் அரசுக்கு தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது பைசர் மற்றும் மாடர்னா இரு நிறுவனங்களும் தில்லிக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க மறுப்பு தெரிவித்துள்ளன.
18-44 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தடுப்பூசியை நேரடியாக விநியோகிக்க மாநிலங்கள் முடிவு செய்தன.
இந்த நிலையில், மாநிலங்களுக்குத் தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்க நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...