ஈரான் போர்நிறுத்தம் கோருவதாகவும், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டால் அதுகுறித்து பரிசீலனை செய்வேன் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு, பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முழுவதுமாக முடக்கியுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென வலியுத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஈரானின் புதிய தலைவர் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டுமென அமெரிக்க அரசிடம் கேட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 1) அன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“ஈரானின் புதிய தலைவர் அமெரிக்காவிடம் இப்போது போர்நிறுத்தத்தைக் கோரியுள்ளார். எப்போது ஹோர்முஸ் நீரிணை எந்தவொரு தடையுமின்றி முழுவதுமாகத் திறக்கப்படுகிறதோ அப்போது நாங்கள் பரிசீலிப்போம்” எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அரசிடம் போர்நிறுத்தம் கோரியதற்கான எந்தவொரு தகவலும் ஈரான் தரப்பிலிருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Trump has stated that Iran is seeking a ceasefire, and that he would consider it if the Strait of Hormuz were opened.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! - டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்..! - ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை


