ரூ.18,000 கட்டணம்; போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்த பயணி

வெறும் ரூ.18,000 கட்டணத்தில் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் மும்பையைச் சேர்ந்த பயணி தன்னந்தனியாக பயணித்துள்ளார்.
ரூ.18,000 கட்டணம்; போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்த பயணி
ரூ.18,000 கட்டணம்; போயிங் விமானத்தில் தன்னந்தனியாக பயணித்த பயணி


மும்பை: மிகப்பெரும் பணக்காரர்களுக்குக் கூட இந்த வாய்ப்பு கிட்டுமா என்பது சந்தேகமே. வெறும் ரூ.18,000 கட்டணத்தில் 360 இருக்கைகள் கொண்ட போயிங் விமானத்தில் மும்பையைச் சேர்ந்த பயணி தன்னந்தனியாக பயணித்துள்ளார்.

மும்பையிலிருந்து துபைக்கு மே 19-ஆம் தேதி புறப்பட்ட போயிங்777 ரக விமானத்தில் மும்பையைச் சேர்ந்த 40 வயது பாவேஷ் ஜாவேரி தனி ஒருவராக பயணித்துள்ளார். இவர் தனது விமானப் பயணத்துக்குச் செலுத்திய கட்டணம் ரூ.18,000. 

மிகவும் பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த விமான சேவையை அன்றாடம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக பயணத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஒரு போயிங் விமானத்தில் பயணம் செய்ய ஒரே ஒரு பயணி மட்டும் முன்பதிவு செய்திருந்த நிலையில், விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், அந்த பயணிக்காக விமானத்தை இயக்கியுள்ளது.

மும்பையிலிருந்து துபைக்கு போயிங் விமானத்தை இயக்க ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவிட்டு ஒரே ஒரு பயணிக்காக இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது. இந்த பயணி இல்லை என்றாலும், இந்த விமானம் இயக்கப்பட்டிருக்கும், ஏனென்றால், துபையிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்கத்தில் இந்த விமானம் இயக்கப்பட வேண்டும் அல்லவா என்று விமான சேவை நிறுவன ஊழியர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com