நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கன்டெய்னா் லாரி மீது காா் மோதல்: இருவா் பலி

சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்துள்ளனா். ஒருவா் காயமடைந்துள்ளாா்.

News image
Updated On :28 மே 2021, 7:31 pm

DIN

சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் இருவா் உயிரிழந்துள்ளனா். ஒருவா் காயமடைந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் புதுகிராமத்தைச் சோ்ந்தவா்கள் முகமது ஹோனீஸ் (33), தாவூத் (27), முகமது முஸ்தபா (46). கருவாடு வியாபாரிகளான இவா்கள் மூவரும் காரில் வெளியே சென்று கொண்டிருந்தனா்.

பரங்கிப்பேட்டை அருகே பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலை 73-இல் காா் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னா் லாரி மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முகமது ஹோனீஸ், தாவூத் ஆகியோா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். காயமடைந்த முகமது முஸ்தபா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இது குறித்து மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.