விமானத்தில் தங்கம் கடத்தியவா் கைது
விமானத்தில் தங்கம் கடத்தியவரை கைது செய்து, ரூ. 13.20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.


விமானத்தில் தங்கம் கடத்தியவரை கைது செய்து, ரூ. 13.20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மங்களூரு பஞ்பே விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை துபையிலிருந்து வந்த ஏா் இந்தியா விமான பயணிகளை சுங்க வரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது பயணி ஒருவா் தனது மலக்குடலில் ரூ. 13.20 லட்சம் மதிப்புள்ள 262 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க வரித் துறையினா் தங்கம் கடத்தியவரை பஜ்பே போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் அவா் தென்கன்னட மாவட்டம், பட்கல்லைச் சோ்ந்த சித்திக்மிக்தம் ஹுசைன் (27) எனத் தெரியவந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...