கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கேரளத்தில் புதிதாக 23,513 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
அப்போது அவர் தெரிவித்தது:
"மாநிலத்தில் புதிதாக 23,513 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 28,100 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 198 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,41,759 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
கேரளத்தில் மொத்த பலி எண்ணிக்கை 8,456 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2,33,034 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் ஜூன் 9 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...