இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 73,762.43 புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 1,505.73 புள்ளிகள் உயர்ந்து 73,453.28 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 443.90 புள்ளிகள் உயர்ந்து 22,775.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
துறைவாரியாக, நிஃப்டி உலோகம் அதிக லாபத்தைப் பெற்று வருகிறது. நிஃப்டி ஐடி, மீடியா உள்ளிட்ட பெரும்பாலான துறை ஏற்றமுடன் உள்ள நிலையில் ஐடி பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்த நிலையில் தற்போது ஏற்றத்தில் உள்ளன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.41 சதவீதம், 2.95 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஈரானுடன் போரைத் தொடர்வதற்கு எவ்விதக் காரணங்களும் இல்லை என்றும் இன்னும் 2-3 வாரங்களில் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து சந்தைகள் இன்று ஏற்றம் கண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.56 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 105.60 டாலராக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து 94.70 ஆக உள்ளது.
நேற்று(மார்ச் 31) பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Stock Market: Sensex gains 1,500 pts, Nifty at 22,800; all sectors in the green
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



