
கரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நெல்லூர் அருகே கிருஷ்ணப்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் லேகியத்துக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
லேகியத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆந்திர அரசு, கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது.
கிருஷ்ணபட்னம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தையா, கடந்த சில நாட்களாக கரோனாவுக்கு லேகியம், கசாயம் ஆகிய நாட்டு மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
பல்வேறு வகையான மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் ஆனந்தையாவின் நாட்டு மருந்தை அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் அல்லாமல், அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தியிருந்தனர்.
பக்க விளைவுகள் இல்லை என நிரூபணமானதால், கரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.