தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கங்கையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆறு சடலங்கள் மீட்பு

உத்தரப் பிரதேச மாநிலம், கங்கையில் மிதந்து கிடந்த கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :31 மே 2021, 8:18 am

உத்தரப் பிரதேச மாநிலம், கங்கையில் மிதந்து கிடந்த கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

ஃபதேபூர் சதர் தெஹ்ஸில் சப்-கலெக்டர் (எஸ்.டி.எம்) பிரமோத் ஜா, ஞாயிற்றுக்கிழமை காலை ஆற்றில் மிதக்கும் சடலங்கள் குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அழுகிய நிலையில் ஆறு உடல்கள் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என்றார். கரோனா வழிகாட்டுதலின் படி பிட்டோரா கங்கா காட்டில் மருத்துவர்கள் குழு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். 

சடலங்கள் மிகவும் சிதைந்திருப்பதால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை, அவை தொலைதூர இடங்களிலிருந்து மிதந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த மாத தொடக்கத்தில், பல்லியாவின் நாராஹி பகுதியில் உள்ள உஜியார், குல்ஹாடியா மற்றும் பாரௌலி காட் ஆகிய இடங்களில் குறைந்தது 52 சடலங்கள் மிதந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.