அரசு நிகழ்வில் பெண் ஒருவர் புகார் அளித்ததால் மத்திய அமைச்சர் அதிருப்தியில் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய அளவிலான தரவுத்தளம் (டேட்டா பேஸ்) ஒன்றை உருவாக்க மத்திய அரசு ‘இ-ஷ்ரம்’ என்கிற இணையதள சேவையை அறிமுகப்படுத்தியது.
சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களை தொழிலாளர்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவும் ‘இ-ஷ்ரம்’ இணையதளத்தில் தொழிலார்களின் விவரம் பதிவேற்றப்பட்டு கார்டு வழங்கப்படும்.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டுகளை வழங்கும் நிகழ்வு பிகார் மாநிலம் பாட்னாவில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு கார்டுகளை வழங்கினார்.
அப்போது, கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டனவா? என்று அமைச்சர் கேட்டதற்கு ரூ. 100 செலுத்தியதாக முகம்மதுபூர் பகுதியைச் சேர்ந்த கிரண் தேவி என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
கார்டுகளை அச்சடித்து வழங்குவதற்கு மத்திய அரசு, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ரூ. 20 வழங்குகிறது. தொழிலாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றே மத்திய அரசு கூறியிருந்த நிலையில், பெண்மணி கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் உடனடியாக இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் கோபமாக அதிருப்தியில் அங்கிருந்து கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒடிஸா அரசு மருத்துவமனை தீ விபத்து: உயிரிழந்த நோயாளிகள் எண்ணிக்கை 12-ஆக உயா்வு

எல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கமேனிக்குப் பிறகு..! ஈரானின் மூத்த தலைவர் அலி லார்ஜானி கொலை?

பெட்டிக்கடைக்கு தீ வைத்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

