அமரீந்தர் சிங் ராஜிநாமா: சோனியா காந்தி ஏற்பு
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ராஜிநாமா கடித்தத்தை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார்.


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ராஜிநாமா கடித்தத்தை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். அதற்கடுத்து பஞ்சாப் அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களால் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
பின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதியக் கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கிய நிலையில், அதிகாரப்பூர்வமாக காங்கிரஸிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்தும் வகையில் சோனியா காந்திக்கு நவ.1 ஆம் தேதி கடிதம் எழுதினார்.
அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அமரீந்தர் சிங் விலகியது பலத்த அதிர்வலைகளைக் கிளப்பிய நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...