தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

இந்தியர்கள் நல்ல நடிகர்கள்; ரஷிய எண்ணெய் வாங்க அனுமதி! - அமெரிக்க நிதியமைச்சர் பேச்சு!

ரஷிய எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளித்ததாக அமெரிக்க நிதியமைச்சர் பேச்சு...

News image

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் - AP

Updated On :7 மார்ச் 2026, 12:11 pm IST

ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியாவுக்கு அனுமதியளித்தோம் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக ரஷிய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாகவும், 30 நாள்களுக்கு மட்டும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கடலிலுள்ள கப்பல்களில் சிக்கியுள்ள ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளதாக, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) பேசியதாவது:

“உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடலில் உள்ள ரஷியாவின் கச்சா எண்ணெய் வாங்க நமது கூட்டாளிகளான இந்தியாவை அனுமதிக்க அமெரிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்கள். தடை விதிக்கப்பட்ட ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என நாம் கூறியவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ரஷியாவுக்குப் பதிலாக அமெரிக்க கச்சா எண்ணெய்யை அவர்கள் வாங்கவுள்ளனர். ஆனால், எண்ணெய் விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளதால் அதைத் தீர்ப்பதற்காக ரஷிய எண்ணெய்யை வாங்க நாம் அனுமதி வழங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த பல முக்கிய அதிகாரிகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US Treasury Secretary Scott Besant has said that we have given permission to India to buy Russian oil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.