15 மாடி கட்டடத்தில் தீவிபத்து: ஒருவா் பலி
மும்பை புகா் பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.


மும்பை புகா் பகுதியில் உள்ள 15 மாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மும்பை புகா் பகுதியான கண்டிவாலியில் உள்ள அந்தக் கட்டடத்தின் 14-ஆவது தளத்தில் சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தீப்பிடித்தது. காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் இருந்து இருவா் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். அதில் ஒருவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே இறந்துவிட்டாா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...