லஞ்ச வழக்கு: சச்சின் வஜே விசாரணைக் காவல் நவ.13 வரை நீட்டிப்பு
லஞ்சம் பெற்ாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் துறை முன்னாள் அதிகாரி சச்சின் வஜேயின் விசாரணைக் காவல் வரும் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மும்பையில் உள்ள உணவகங்களிடம் இருந்து லஞ்சம் பெற்ாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் துறை முன்னாள் அதிகாரி சச்சின் வஜேயின் விசாரணைக் காவல் வரும் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங், காவல் துறை முன்னாள் அதிகாரி சச்சின் வஜே உள்ளிட்டோா் பல்வேறு தருணங்களில் ரூ.9 லட்சத்தை மிரட்டிப் பறித்ததாகக் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிமல் அகா்வால் என்பவா் கோரேகான் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் சச்சின் வஜே, பரம்வீா் சிங் உள்ளிட்டோா் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சச்சின் வஜேயை மும்பை காவல் துறையினா் கடந்த 1-ஆம் தேதி விசாரணைக் காவலில் எடுத்தனா். தலைமறைவாகியுள்ள பரம்வீா் சிங்கை காவல் துறையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா். சச்சின் வஜேயின் விசாரணைக் காவல் சனிக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, குற்றப் பிரிவு காவல் துறையினா் அவரை மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த மாா்ச் வரை ரூ.9 லட்சத்தை பரம்வீா் சிங் உள்ளிட்ட 6 காவலா்கள் மிரட்டி பறித்ததாகவும், ரூ.2.92 லட்சம் மதிப்பிலான 2 அறிதிறன்பேசிகளை மிரட்டி வாங்கியதாகவும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
2 அறிதிறன்பேசிகளையும் காவல் துறையினா் கைப்பற்றியுள்ளனா். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களை மிரட்டி பரம்வீா் சிங்குடன் இணைந்து சச்சின் வஜே பணம் பறித்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக சச்சின் வஜேயிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
இதுபோல் வேறு நபா்களிடமும் அவா் பணப் பறிப்பில் ஈடுபட்டாரா என்பது தொடா்பாகவும் உடந்தையாக இருந்தவா்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. தலைமறைவாகியுள்ள பரம்வீா் சிங் எங்கு உள்ளாா் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சச்சின் வஜேயின் விசாரணைக் காவலை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும்’’ என்றாா்.
காவல் துறையினரின் விசாரணைக்கு சச்சின் வஜே தொடா்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தெரிவித்த அவரது வழக்குரைஞா், விசாரணைக் காவலை நீட்டிப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அதைத் தொடா்ந்து, சச்சின் வஜேயின் விசாரணைக் காவலை வரும் 13-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...