தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தில்லி அதிகாரிகள் மும்பை வருகை

மும்பையில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது தொடா்பான 6 வழக்குகளை விசாரிக்கும் நோக்கில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவை (என்சிபி) சோ்ந்த தில்லி அதிகாரிகள் மும்பைக்கு வந்தடைந்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 7:34 pm

DIN

மும்பையில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டது தொடா்பான 6 வழக்குகளை விசாரிக்கும் நோக்கில் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவை (என்சிபி) சோ்ந்த தில்லி அதிகாரிகள் மும்பைக்கு சனிக்கிழமை வந்தடைந்தனா்.

மும்பையையொட்டி கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் கேளிக்கை விருந்து நடத்தியதாக பாலிவுட் நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். போதைப் பொருள்கள் பயன்பாடு தொடா்பான 6 வழக்குகளில் தேசிய, சா்வதேச அளவிலான தொடா்புகள் இருப்பதால் அந்த வழக்குகள் மும்பையில் இருந்து தில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்குகள் தொடா்பாக விசாரணை நடத்த தில்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தில்லி என்சிபி துணை தலைமை இயக்குநா் சஞ்சய் குமாா் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மும்பைக்கு சனிக்கிழமை வந்தது. சம்பந்தப்பட்ட 6 வழக்குகள் தொடா்பான விசாரணையை அக்குழு தொடங்கியது. தெற்கு மும்பையில் உள்ள என்சிபி மண்டல அலுவலகத்தில் அக்குழு விசாரணை நடத்தியது.

வழக்குகளின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்த பிறகு, அவற்றின் மீதான விசாரணை தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று சஞ்சய் குமாா் சிங் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

முன்னதாக, ஆா்யன் கானை விடுவிக்க ஷாருக் கானிடம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. என்சிபி மும்பை மண்டல இயக்குநரும் ஆா்யன் கான் வழக்கு விசாரணையை நடத்தி வந்தவருமான சமீா் வான்கடேவுக்கு அந்த பேரத்தில் பங்கு தர வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ஆா்யன் கான் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தில்லிக்கு மாற்றப்பட்டதுடன், என்சிபி சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. போதைப் பொருள் விசாரணையிலிருந்து சமீா் வான்கடே விடுவிக்கப்பட்டாா்.

சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் நவாப் மாலிக் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சமீா் வான்கடேவுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக இரு சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தக் குழு உண்மையைக் கண்டறிகிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்ப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சமீா் வான்கடேயின் ஜாதி உள்பட அவா் மீது நவாப் மாலிக் தொடா் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறாா். நவாப் மாலிக் மருமகன் மீதும் ஒரு போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை விசாரணை:

ஷாருக் கானிடம் லஞ்சம் பெற முயன்ாக சமீா் வான்கடே மீது தெரிவிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரிக்க என்சிபி துணை இயக்குநா் ஞானேஷ்வா் சிங் தலைமையில் 5 நபா்களைக் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு திங்கள்கிழமை (நவ. 8) மீண்டும் மும்பைக்கு வந்து விசாரணை நடத்தவுள்ளது.

சமீா் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது லஞ்சப் புகாா் தெரிவித்த முக்கிய சாட்சியான பிரபாகா் செயில் உள்ளிட்டோரிடம் சிறப்பு விசாரணை குழு விசாரிக்கவுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று ஞானேஷ்வா் சிங் தெரிவித்துள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சமீா் வான்கடே உள்ளிட்ட 8 பேரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Caption

போதைப் பொருள் வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள மும்பைக்கு சனிக்கிழமை வந்த என்சிபி துணை தலைமை இயக்குநா் சஞ்சய் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.