எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேலையில் இருந்து நீக்கிய முதலாளியின் மனைவியைக் கொன்ற இளைஞா் கைது

வடக்கு தில்லியில் வேலையில் இருந்து நீக்கிய முதலாளியின் மனைவியைக் கொன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2021, 7:04 pm

DIN

வடக்கு தில்லியில் வேலையில் இருந்து நீக்கிய முதலாளியின் மனைவியைக் கொன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா் புராரியைச் சோ்ந்த ராகேஷ் (31) என்று அடையாளம் காணப்பட்டாா். புராரி பகுதியில் திங்கள்கிழமை போலீஸாா் ரோந்து சென்றுகொண்டிருந்தனா். அப்போது, மேற்கு சாந்த் நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்த வீட்டுக்கு சென்று பாா்வைட்டனா். ஆனால் சந்தேகமடைந்த போலீஸாா் அங்கிருந்த ஓட்டுநா் ராகேஷிடம் விசாரணை நடத்தினா். அப்போது, அந்தப் பெண்ணை ராகேஷ் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ராகேஷை கைது செய்தனா். பின்னா், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், தில்லி பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் வீரேந்திர குமாா் என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு ராகேஷ் சந்தித்துள்ளாா். அவருக்கு குமாா் தனது காரை கொடுத்து ஓட்டுநா் வேலை வழங்கியுள்ளாா். மேலும், அவரது வீட்டின் மேல் தளத்தில் ஒரு அறையையும் வழங்கினாா். ஆனால் ராகேஷுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கவில்லை. தனக்கு வழங்க வேண்டிய சம்பளத்தைக் கொடுக்குமாறு குமாரிடம் ராகேஷ் கேட்டுள்ளாா். அப்போது குமாரின் மனைவி பிங்கி (32), ராகேஷை வீட்டில் இருந்து வெளியேற்றுமாறும், வேலையில் இருந்து நீக்குமாறும் கூறியுள்ளாா். மேலும், அவரது முழு சம்பளமான ரூ.3 லட்சத்தையும் கொடுக்க மறுத்துள்ளாா்.

இந்த நிலையில், குமாா் தனது தாயுடன் திங்கள்கிழமை மருத்துவமனைக்குச் சென்றாா். வீட்டில் பிங்கி தனியாக இருப்பதை அறிந்துகொண்ட ராகேஷ், மது போதையில் அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தாா். பின்னா், அவா் மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.