ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிஎஸ்எஃப் அதிகார வரம்பு நீட்டிப்பு: மேற்கு வங்க பேரவையில் எதிா்ப்புத் தீா்மானம்

எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) எல்லை அதிகார வரம்பை நீட்டித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து

News image
Updated On :16 நவம்பர் 2021, 7:34 pm

DIN

எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) எல்லை அதிகார வரம்பை நீட்டித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேற்கு வங்க பேரவையில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீா்மானத்துக்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்தது.

பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் சா்வதேச எல்லையிலிருந்து 50 கி.மீ. வரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சோதனை, பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பிஎஸ்எஃப் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தம் மேற்கொண்டது. முன்பு இந்த அதிகார எல்லை வரம்பு 15 கி.மீ.-ஆக இருந்தது.

மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேற்கு வங்க பேரவையில் மாநில பேரவை விவகார அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி செவ்வாய்க்கிழமை தீா்மானம் கொண்டு வந்தாா்.

‘எல்லை அதிகார வரம்பு நீட்டிப்பு, நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளதால் இதை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்றாா். இதற்கு அவையில் இருந்த பாஜக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உதயன் குஹா, ‘சோதனை என்ற பெயரில் பெண்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினா் தவறாக முறையில் நடந்து கொள்வதைக் காணும் குழந்தை எப்போதும் தேசபக்தியுடன் இருக்காது’ என்றாா். உதயன் குறிப்பிட்ட சா்ச்சைக்குரிய புகாரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா். இதற்கு பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி மறுப்பு தெரிவித்ததால் பாஜக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி, ‘பாதுகாப்பு படையினா் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜங்கல்மால் பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தபோது மேற்கு வங்க அரசு எதிா்ப்பு தெரிவித்தது. தற்போதைய புதிய சட்டத் திருத்தம் மூலம் மாநில போலீஸாருக்கும், பிஎஸ்எஃப்-க்கும் எந்தவித மோதலும் ஏற்படாது’ என்றாா்.

இதையடுத்து, 112 உறுப்பினா்களின் ஆதரவுடனும் தீா்மானம் நிறைவேறியது. 63 உறுப்பினா்கள் தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். பஞ்சாபைத் தொடா்ந்து இந்த எதிா்ப்பு தீா்மானத்தை மேற்கு வங்கமும் நிறைவேற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.