அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கேரளத்தில் இன்று மேலும் 6,111 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 6,111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :18 நவம்பர் 2021, 3:21 pm

DIN

கேரளத்தில் ஒரேநாளில் 6,111 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 66,693 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 6,111 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 848, எர்ணாகுளத்தில் 812, கோழிக்கோட்டில் 757 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,84,095 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 51 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 36,847 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 72,288 சிகிச்சையில் உள்ளனர்.  கரோனாவிலிருந்து இன்று 7,202 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை  49,84,328 ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 2,05,822 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.