மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பஞ்சாப் தேர்தல்: பாஜகவுடன் அமரீந்தர் கூட்டணி?

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூட்டணி உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 நவம்பர் 2021, 10:22 am

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூட்டணி உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தருக்கும் காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இடையே மோதல் நிலவி வந்த நிலையில், அமரீந்தர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் கட்சியிலிருந்து விலகினார்.

இதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றால் பாஜகவுடன் கூட்டணி வைப்போம் என அமரீந்தர் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று காலை பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, மோடிக்கு நன்றி தெரிவித்து அமரீந்தர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தற்போது பாஜகவும் அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸும் கூட்டணி வைப்பது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.