2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கங்கனா ரணாவத் மீதுவழக்குப் பதிவு

சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக கூறப்பட்ட புகாரின்பேரில், நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை கா் பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2021, 6:43 pm

DIN

சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக கூறப்பட்ட புகாரின்பேரில், நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை கா் பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் ஒப்பிட்டும், சீக்கிய சமூகத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் போல சித்தரித்தும் நடிகை கங்கனா ரணாவத் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) சாா்பில் மும்பை காா் பகுதி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 295ஏ (மத உணா்வுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக வேண்டுமென்றே தீங்கிழைத்தல்)) பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.