மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நவ. 28-ல் மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடன் வெங்கையா நாயுடு ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடன் நவம்பர் 28ஆம் தேதி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தவுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2021, 7:25 am

DIN

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடன் நவம்பர் 28ஆம் தேதி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் இரு அவைகளும் நவ. 29-ஆம் தேதி முதல் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி நவ. 28-ஆம் தேதி மாநிலங்களவை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் அவரின் இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் அரசு சாா்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் கலந்துகொள்ளவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.