எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தடுப்பூசி செலுத்தி கொண்ட 66 மாணவர்களுக்கு கரோனா; கர்நாடக மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 நவம்பர் 2021, 11:44 am

DIN

கர்நாடக தார்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சிலருக்கு கரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. இதனிடையே, அந்த கல்லூரி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

அந்த கல்லூரியில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதன் பின்னரே சில மாணவர்களிக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கல்லூரியில் படிக்கும் 400 மாணவர்களில் 300 பேருக்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 66 மாணவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த 66 மாணவர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரியில் உள்ள 2 விடுதிகளுக்குச் சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதால் அவர்களுக்குத் தீவிர கரோனா பாதிப்பு இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தேவைப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் தடுப்பூசி செலுத்து கொண்ட 66 மாணவர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.