தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மும்பையில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை: இருவா் கைது

மும்பையில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:46 pm

DIN

மும்பையில் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மும்பை குா்லா பகுதியில் காலியாக உள்ள 13 அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில், விடியோ எடுப்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்த சிலா் சென்றபோது, அங்கு பெண்ணின் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதன்பேரில் வினோபா பாவே நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அந்தப் பெண்ணைக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக இணை போலீஸ் ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) விஸ்வாஸ் நாங்க்ரே பாட்டீல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.