ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நாளை தாக்கல்

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கும் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

News image
கோப்புப் படம்
Updated On :27 நவம்பர் 2021, 11:55 pm

DIN

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கும் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பலகட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதிலும், அவற்றில் எந்தவித தீா்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த 19-ஆம் தேதி அறிவித்தாா். அந்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள், நவம்பா் 29-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 24-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், திங்கள்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்த மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் அறிமுகப்படுத்தவுள்ளாா். அவற்றின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென அக்கட்சியின் கொறடா வலியுறுத்தியுள்ளாா்.

மசோதாவில் இருப்பது என்ன? வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவில், ‘விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டும் நோக்கிலும், மேம்பட்டுள்ள தொழில்நுட்ப வசதிகளால் பலனடைவதற்காகவும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. குறு, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவா்களது வருமானத்தை உயா்த்துவதற்குமான வாய்ப்புகளை வேளாண் சட்டங்கள் வழங்கின. அச்சட்டங்களுக்கு எதிராக சில விவசாயக் குழுக்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வேளாண் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவா்களுக்கு உணா்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. அந்நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. ஒருங்கிணைந்த வளா்ச்சியை ஏற்படுத்துவதில் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும் என்பதால், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தபிறகு, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பிறகு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் புதிய வேளாண் சட்டங்கள் அதிகாரபூா்வமாக ரத்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.