மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை மாநிலங்களை தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “12 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி உங்கள் அலுவலகத்துக்கு வந்தோம். இந்த சம்பவம் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது. அதற்கு இப்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்”.
இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, “கடந்த மழைக்கால அமர்வின் கசப்பான அனுபவம் இன்னும் நம்மில் பெரும்பாலோரை ஆட்டிப்படைக்கிறது. ஆகையால், இடைநீக்கத்தை திரும்பப் பெற இயலாது” என்றார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்களவையின் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் நடத்தை விதி: கடலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழா நிறைவு
காரைக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள், காா் திருட்டு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

