மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் டிசம்பர் 15வரை பள்ளிகள் மூடல்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழலில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல்: மும்பையில் டிசம்பர் 15வரை பள்ளிகள் மூடல்

Updated On :30 நவம்பர் 2021, 10:33 am

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த சூழலில் புதிதாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் காரணமாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் கடந்த நவம்பர் 24அம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தன.

தற்போது ஒமைக்ரான் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக டிசம்பர் 15ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி பள்ளிகள் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.