பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லியில் புதிதாக 27 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 அக்டோபர் 2021, 3:25 pm

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 55,537 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதம்.

மேலும் 76 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் ஒரு உயிரிழப்புகூட பதிவாகவில்லை.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,027 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,13,590 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 25,088 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 349 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.