அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உள்துறை அமைச்சா் அமித் ஷாஜம்மு-காஷ்மீருக்கு இந்த மாதம் வருகை?

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களை தொடக்கி வைக்க ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 8:50 pm

DIN

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களை தொடக்கி வைக்க ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க காஷ்மீா் மற்றும் ஜம்மு யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா வர வாய்ப்புள்ளது. இந்த சுற்றுப்பயணம் அக்டோபா் 23 முதல் 25-ஆம் தேதி வரையில் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா திட்டப் பணிகளை ஏற்கெனவே மத்திய அமைச்சா்கள் பலா் பாா்வையிட்டுள்ளனா். இந்த பயணத்தின்போது யூனியன்பிரதேச நிா்வாகம், காவல் துறை, துணை ராணுவம் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு தொடா்பான உயா்மட்ட கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.