காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

‘பாவத்தைப் போக்க மொட்டையடித்துக் கொண்டேன்’: திரிணமூல் கட்சியில் இணைந்த பாஜக எம்எல்ஏ

திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷிஷ் தாஸ் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 4:17 pm

DIN

திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷிஷ் தாஸ் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பல்வேறு பாஜக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரிணமூல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான ஆஷிஷ் தாஸ் திரிணமூல் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார்.

முன்னதாக பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ஆஷிஷ் தாஸ் தனது பாவத்திற்கு பிராயசித்தம் தேடும் விதமாக மொட்டையடித்துக் கொண்டார். திரிணமூல் கட்சியில் சேர்வதற்கு முன்பாக தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள மொட்டையடித்துக் கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.