நாகாலாந்து மாநிலத்தில் ரூ.29 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் போதைப் பொருளை காவல்துறையினர் கடந்த அக்-4 ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
நாகாலாந்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக கடந்த அக்-1,2,3 ஆம் தேதிகளில் கோஹிமா மாவட்ட எல்லையான குசாமாவில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 48 கிலோ எடையுள்ள 290 தங்கக் கட்டிகள் மற்றும் ஹெராயின் போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | திருச்சியில் ரூ. 59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
இதுகுறித்து மாநில காவல்துறைத் தலைவர் சந்தீப் எம் தாம்கெட்ஜ் , ‘ கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்ட போது ஞாயிற்றுக்கிழமை(அக்-3) குசாமா சோதனைச் சாவடியில் காரின் கியர் பகுதியில் வைத்து கடத்திவரப்பட்ட 48 கிலோ எடையுள்ள தங்கத்தையும் , போதைப்பொருளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்’ எனத் தெரிவித்தார்.
கடத்திவரப்பட்ட 48 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.22.78 கோடி என்றும் 80 சோப் கட்டிகளாக கொண்டுவரப்பட்ட ஹெராயின் மற்றும் ஓபியம் போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.6.50 கோடி என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கடத்தலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சௌரவ் மிஸ்ரா(35) மற்றும் பவன் குமார்(45) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


