கேரளத்தில் புதிதாக 10,691 பேருக்கு கரோனா
கேரளத்தில் ஒரேநாளில் 10,691 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் ஒரேநாளில் 10,691 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 81,914 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 10,691 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 1,197 பேரும், கோழிக்கோட்டில் 976, கோட்டயத்தில் 872 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,94,800 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 85 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,258 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,11,083 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 12,655 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 46,56,866 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...