ரயிலில் இளம்பெண் வன்கொடுமை: குற்றவாளிகள் 8 பேரும் கைது
மகாராஷ்டிர மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்


மகாராஷ்டிர மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் லக்னெள - மும்பை இடையிலான விரைவு ரயில் 20 வயது பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
காட்புரி - கசரா பகுதிகளுக்கு இடையே சுரங்கத்திற்குள் ரயில் சென்றபோது ரயிலில் கத்தி உள்பட தோல் பொருள்களுடன் இருந்த மர்ம நபர்கள் 8 பேர் பயணிகளை மிரட்டியுள்ளனர்.
20 வயது பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற அவர்கள், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அரசு ரயில்வே காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்போது சக பயணிகள் கூச்சலிட்டதில் வேகமாக செயல்பட்ட காவல் துறையினர் உடனடியாக 4 பேரை கைது செய்தனர். எஞ்சிய 4 பேர் தப்பியோடினர். அவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், இன்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். எட்டு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்துதல், அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...