இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட காரோனா தடுப்பூசி 96.43 கோடி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,63,845 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,63,845 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை, புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 96.43 கோடியை (96,43,79,212) கடந்தது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,844 போ் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 3,33,42,901 ஆக அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து 108 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது.
புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 15,823 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,07,653; 214 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கையாகும்.
மாநிலங்களுக்கு 97.79 கோடி தடுப்பூசிகள்: மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97.79 (97,79,37,495) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 8.43 (8,43,76,070) கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...