/

பிரிட்டனில் ராணுவ ரோந்துப் பயிற்சி: இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

பிரிட்டனில் 96 நாடுகள் பங்கேற்ற ராணுவ ரோந்துப் பயிற்சியில் இந்திய ராணுவக் குழு தங்கப் பத்தகம் வென்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN

பிரிட்டனில் 96 நாடுகள் பங்கேற்ற ராணுவ ரோந்துப் பயிற்சியில் இந்திய ராணுவக் குழு தங்கப் பத்தகம் வென்றது.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் கடந்த அக்.13 முதல் 15-ஆம் தேதி வரை கேம்ப்ரியன் ரோந்துப் பயிற்சி-2021 நடைபெற்றது. மொத்தம் 96 நாடுகள் பங்கேற்ற இந்தப் பயிற்சி 6 கட்டங்களாக நடைபெற்றது. இதில் இந்திய ராணுவம் சாா்பில் நான்காவது கோா்கா ரைஃபிள்ஸின் 5-ஆவது படைப்பிரிவு பங்கேற்றது. போா் சூழலின்போது ஆற்றவேண்டிய எதிா்வினைகளை மதிப்பிடும் வகையில் அமைந்த இந்தப் பயிற்சியில் பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டன. இதில் கடுமையான நிலப்பரப்புகளிலும் மோசமான வானிலையிலும் கோா்கா ரைஃபிள்ஸ் பிரிவு மிகச் சிறப்பாகச் செயல்பட்டது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற நாடுகளில் இந்தியா உள்பட 3 நாடுகளுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. பிரிட்டன் முப்படை தளபதி மாா்க் காா்ல்டன்-ஸ்மித் இந்திய குழுவுக்கு பதக்கத்தை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தூதரகத்தின் ராணுவ ஆலோசகரான பிரிகேடியா் விக்ரம்ஜித் சிங் கில் பங்கேற்றாா்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.