தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
தெலங்கானா-சத்தீஸ்கா் மாநில எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.


தெலங்கானா-சத்தீஸ்கா் மாநில எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடம் இருந்து ஏகே47 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சிஆா்பிஎஃப் படையினரும், சத்தீஸ்கா் மாநில போலீஸாரும் சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் திங்கள்கிழமை காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, தெலங்கானாவின் முலுகு மாவட்டம், சத்தீஸ்கரின் பிஜாப்பூா் மாவட்ட எல்லையையொட்டிய வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீரென பாதுகாப்புப் படை வீரா்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்களும் பதிலடி தாக்குதல் அளித்தனா்.
இறுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கான தேடுதல் வேட்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...