கொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்

கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்களைப் பறிமுதல் செய்தனர்.
கொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்
கொல்கத்தா: ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கம் , பணம் பறிமுதல்
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.23 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் , வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்கத்தாவின்  மார்க்விஸ் வீதியில் நேற்று முந்தினம் (அக்.23) சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 4.6 கிலோ எடையுள்ள 40 தங்கக்கட்டிகள் , ரூ.93 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாய் மற்றும் வெளிநாட்டுப் பணங்களைப் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து சில நாட்களாக கொல்கத்தாவின் பல பகுதிகளிலும் சுங்கத் துறையினர் சோதனை நடந்து வருகிறது . முன்னதாக அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கத்தைக் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com