நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் நவ. 1 முதல் இயக்கம்

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நவம்பர் 1 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் நவ. 1 முதல் இயக்கம்
Updated On :25 அக்டோபர் 2021, 1:55 pm

DIN

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நவம்பர் 1 முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமான நாடு முழுவதும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நோய்த்தொற்று குறைந்ததையடுத்து முன்பதிவில்லா பெட்டிகளை நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில்,

“ரயில்களில் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும். முதற்கட்டமாக 23 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும்.

ராமேஸ்வரம் - திருச்சி, திருச்சி - ராமேஸ்வரம், சென்னை - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சென்னை, பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு டவுன், கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், நாகர்கோவில் - கோட்டயம், கோட்டயம் - நாகர்கோவில், கோவை - மங்களூர், மங்களூர் - கோவை, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர்கோவில், திருச்சி - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - திருச்சி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.