கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா: இதுவரை 3.42 கோடி பேருக்கு பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 

News image
Updated On :27 அக்டோபர் 2021, 4:10 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,451 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது 

நேற்று முன் தினம் 14,306 பேரும், நேற்று 12,428 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.27) சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் புதிதாக 13,451 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 653-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 585 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,653-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 14,021 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக்க கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,97,339-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும்  1,62,661 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாடு முழுவதும் இதுவரை 1,03.53 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.