25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ராணுவ அதிகாரிகளுடன் இன்று உரையாடுகிறார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக்.27) பிற்பகல் 3 மணியளவில் ராணுவ அதிகாரிகளுடன் உரையாட திட்டமிட்டுள்ளார்.

News image
ராஜ்நாத் சிங் (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (அக்.27) பிற்பகல் 3 மணியளவில் ராணுவ அதிகாரிகளுடன் உரையாட திட்டமிட்டுள்ளார்.

ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

ராணுவ அதிகாரிகள் மாநாடு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் ராணுவ அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று ராணுவ அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் உரையாற்றவுள்ளார்.

இதில், தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், முக்கிய சாலைகளின் ஓரத்தில் மத்திய துணைராணுவப் படையினா் சாவடிகளை மீண்டும் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.