ரோமில் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி!
ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள ரோம் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.


ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள ரோம் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாடு நாளையும் நாளை மறுநாளும்(அக். 30, 31) இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடியும் இன்று ரோம் சென்றடைந்தார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நடக்கும் ஜி-20 கூட்டம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின்போது உலக நாடுகளின் முக்கியத் தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளார்.
இன்று ரோம் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பிளாசா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வசிக்கும் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிக்க | ஜி-20 மாநாடு: ரோம் சென்றடைந்தார் பிரதமர் மோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...